டெல்லி ஜாமா மசூதிக்குள் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் நுழைய தடை


டெல்லி ஜாமா மசூதிக்குள் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் நுழைய தடை
x

டெல்லி ஜாமா மசூதிக்கு பெண்கள் தனியாகவும் குழுவாகவும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

டெல்லியின் ஜாமா மசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் நுழைவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது.சமீபத்தில், மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்திற்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடை விதித்து இருந்தது.

ஷாஹி இமாம் சையத் அகமது புகாரியின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில "சம்பவங்கள்" பதிவாகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லி மகளிர் ஆணையதலைவர் ஸ்வாதி மாலிவாலும் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஜாமா மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை விதித்த முடிவு தவறானது. மசூதியின் இமாமுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன். பெண்கள் நுழைவதை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை" என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

மசூதியின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா கான் கூறும் போது பெண்கள் தனியாக வரும்போது, மத ஸ்தலத்தில் "முறையற்ற செயல்கள்" காணப்படுவதாகவும், அத்தகைய நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.

"மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை இல்லை. பெண்கள் தனியாக வரும்போது, முறைகேடான செயல்கள், வீடியோக்கள் வளாகத்தில் படமாக்கப்படுகின்றன. இதுபோன்ற பழக்கங்களை நிறுத்தவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் மசூதிக்கு வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.


Next Story