கொள்ளை வழக்குகளில் பட்டதாரி உள்பட 2 பேர் கைது
கொள்ளை வழக்குகளில் பட்டதாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு கிரிநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பேடராயனபுராவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 29), நிதின்ராஜ் (19) என்று தெரிந்தது. இவா்களில் ஸ்ரீதர் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவாா்.
அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளார். இதற்காக இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களை தாக்கியும், அவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரிந்தது. அதன்படி கொள்ளையடித்த பணத்தின் மூலமாக 2 பேரும் கோவாவுக்கு சென்று ஆடம்பரமாக செலவு செய்திருந்தனர். கைதான 2 பேரிடம் இருந்து தங்க நகைகள், செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story