சிவமொக்காவில் பிரவீன் கொலையை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


சிவமொக்காவில் பிரவீன் கொலையை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

சிவமொக்காவில் பிரவீன் கொலையை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிவமொக்கா;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பெல்லாரேவில் பா.ஜனதா இளைஞரணி நிர்வாகி பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து மாநில முழுவதும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவமொக்காவில் பா.ஜனதா கட்சியினர் பி.எச். சாலை சிவப்பா நாயக் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ், மாவட்ட பா.ஜனதா தலைவர் மேகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story