சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் குடிமக்கள் சேவைக்கான தேசிய சட்ட சேவைகள் ஆணைய மையம் திறந்து வைப்பு


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் குடிமக்கள் சேவைக்கான தேசிய சட்ட சேவைகள் ஆணைய மையம் திறந்து வைப்பு
x

குடிமக்கள் சேவைக்கான தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கான மையம் இந்திய தலைமை நீதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியின் மான்சிங் சாலையில் உள்ள ஜாய்சல்மர் ஹவுசில், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் இன்று குடிமக்கள் சேவைக்கான தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திற்கான (என்.ஏ.எல்.எஸ்.ஏ.) மையம் ஒன்றை திறந்து வைத்து உள்ளார்.

இந்த மையம் ஆனது, குடிமக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோருக்கான சட்ட உதவி மையம் ஆக செயல்படுவதுடன், பயிற்சி மையம் மற்றும் நாடு முழுவதும் வருங்காலத்தில் சட்ட சேவைகள் வழங்குவதற்கான டிஜிட்டல் வழி மையம் ஆகவும் செயல்பட்டு பயனளிக்கும்.

இந்த திறப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மற்றும் என்.ஏ.எல்.எஸ்.ஏ. செயல் தலைவர் டி.ஒய். சந்திரசூட், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் சக நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், என்.ஏ.எல்.எஸ்.ஏ. செயல் தலைவர் நீதிபதி சந்திரசூட்டை, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி லலித் பாராட்டி பேசினார்.

2047-ம் ஆண்டுக்கான வருங்கால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய, இலவச சட்ட உதவி பலன்களை பெறுவோரின் நலனுக்காக, ஒரு முன்னோக்கிய நடவடிக்கையை எடுத்ததற்காக சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகிகளையும் நீதிபதி லலித் புகழ்ந்து பேசியுள்ளார்.


Next Story