மெஜஸ்டிக் உள்பட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க முடிவு


மெஜஸ்டிக் உள்பட   மெட்ரோ ரெயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க முடிவு
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மெஜஸ்டிக் உள்பட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் பங்களிப்புடன் வணிக வளாகம் உள்ளிட்டவைகளை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக பொது மேலாளர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெங்களூருவில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் 55 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கெம்பேகவுடா மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதிதாக 4 மாடிகள் கொண்ட வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தியேட்டர்கள், மால்கள், கடைகள் அமைக்கப்படும். மேலும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ நிலையங்களிலும் இதுபோன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பொருட்கள் வாங்குவதும் சுலபமாகும். மேலும், மெட்ரோ நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.


Next Story