இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு... பின்னணி என்ன..?


இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு... பின்னணி என்ன..?
x

பங்கு சந்தைகளில் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் போரின் விளைவாக உலகப் பொருளாதாரம் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிந்து வந்தன. ஆனால் ஜூலையில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 7.76 சதவீதமும், தேசிய பங்கு சந்தையின் நிப்டி 7.91 சதவீதமும் அதிகரித்துள்ளன.

கடந்த வெள்ளியன்று 712 புள்ளிகள் உயர்ந்து, 57,570ஆக சென்செக்ஸ் அதிகரித்துள்ளது. நிப்டி 228 புள்ளிகள் அதிகரித்து, 17,158ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இது தான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை அன்னிய முதலீட்டாளர்கள் 6,300 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். 2021 செப்டம்பருக்கு பிறகு அவர்கள் பங்குகளை வாங்குவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளியன்று 50 பைசா அதிகரித்து, 79.25 ரூபாயாக உயர்ந்தது. புதன் அன்று அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தி, 2.5 சதவீதமாக அதிகரித்தும், இந்திய ரூபாய் வலுவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூனில் தொழில்துறைகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களின் அளவு 9.5 சதவீதமும், சேவை துறைகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களின் அளவு 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளதை இது உணர்த்துவதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story