இந்து பெண் தலை துண்டித்து கொலை எதிரொலி; சிறுபான்மையினரை பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும் - இந்தியா

பாகிஸ்தான் தனது சிறுபான்மையினரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இந்து பெண் தலை துண்டித்து கொலை எதிரொலி; சிறுபான்மையினரை பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும் - இந்தியா
Published on

பாகிஸ்தானில் சிஞ்சோரா நகரில் 40 வயதான ஒரு இந்து பெண், தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

குறிப்பிட்ட அந்த சம்பவம் பற்றி என்னிடம் விரிவான அறிக்கை இல்லை. அதனால் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது. கடந்த காலங்களில், பாகிஸ்தான் தனது சிறுபான்மையினரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது நலன்கள், பாதுகாப்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தியா சொல்லி இருக்கிறது. அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com