இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு...!


இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு...!
x

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 76-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 25 ஆயிரத்து 239 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 215 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 49 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story