'இந்திய பொருளாதாரம் 2047-ல் 40 ட்ரில்லியன் டாலராக உயரும்' – முகேஷ் அம்பானி


இந்திய பொருளாதாரம் 2047-ல் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் – முகேஷ் அம்பானி
x

2047-ல் இந்தியா பொருளாதாரம் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும். பெரிய வளர்ச்சியை எட்டும்.

3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியா, 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு அதிகரித்து, 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியை அடையும். பொருளாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா இடம்பெறும்.

பயோ-எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆகிய மூன்றும் வருங்காலங்களில் இந்தியாவின் அசுர வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த மூன்று புரட்சிகளும் சேர்ந்து நம்முடைய அழகான பூமியை காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story