இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 275- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த நிலை மாறி தற்போது மூன்று இலக்க எண்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது மக்களும் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 275- ஆக குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 624- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,672- ஆக குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.93 -கோடியாக உள்ளது.
Related Tags :
Next Story