இந்தியாவில் நேற்றைவிட சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!


இந்தியாவில் நேற்றைவிட சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Aug 2022 9:46 AM IST (Updated: 20 Aug 2022 11:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது மேலும் அதிகரித்தது. இதன்படி நேற்று ஒரே நாளில் மேலும் 15 ஆயிரத்து 754 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 272 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,27,890 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,289 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,900 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,36,99,435 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,01,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,09,40,48,140 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,15,536 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,15,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,21,88,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

1 More update

Related Tags :
Next Story