இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,531- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் ப்டி. கடந்த 19-ந்தேதி பாதிப்பு 15,754 ஆக இருந்தது. மறுநாள் 13,272 ஆகவும், நேற்று 11,539 ஆகவும் குறைந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. இந்தியாவில் இன்று 9,531 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,27,368 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 11,726 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 97,648 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,231 குறைவு ஆகும்.