பணியில் இருந்த போது வாக்குவாதம் - சக கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டுக் கொன்ற இந்திய ரிசர்வ் பட்டாலியன் வீரர் கைது!


பணியில் இருந்த போது வாக்குவாதம் - சக கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டுக் கொன்ற இந்திய ரிசர்வ் பட்டாலியன் வீரர் கைது!
x

இந்திய ரிசர்வ் பட்டாலியன் வீரர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டுக் கொன்றார்.

இட்டாநகர்,

அருணாசல பிரதேச தலைநகர் இட்டாநகர் அருகே டோய்முக்கில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட இந்திய ரிசர்வ் பட்டாலியனின்(ஐஆர்பிஎன்) வீரர் ஒருவர், தனது சக ஊழியர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றார். இந்தத் தகவலை போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

டோய்முக் போலீஸ் அதிகாரி இனியா அதே கூறுகையில், டியூன் பகுதி இந்திய ரிசர்வ் பட்டாலியனின் தலைமைக் காவலர் வாங்ரு டைடோங் என்பவர், தனது சர்வீஸ் துப்பாக்கியை கொண்டு கான்ஸ்டபிள் சிங்ரி மோமாய் என்பவர் மீது இரண்டு ரவுண்டுகள் சுட்டார். அவர்கள் இருவருக்குமிடையே நேற்றிரவு கடும் வாக்குவாதம் நடந்தது. அதன் முடிவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் என்ற தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சரியான மனநிலையில் இல்லாவிட்டால், அவர் சேவையில் இருந்திருக்க முடியாது.போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆயுதத்தை பறிமுதல் செய்தது.இது குறித்து விசாரணை நடத்திய பிறகு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இது தொடர்பாக ஐபிசி 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


Next Story