அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்!


அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்!
x

5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு சேவைகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள நுகர்வோர்கள் 5ஜி சேவையை அணுகக்கூடிய முதல் நபர்களாக இருக்கலாம்.

5ஜி அலைக்கற்றை மெகா ஏலம், கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றது.மொத்தம் 40 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில், மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும்.ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு சேவைகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைதொடர்பு இணைப்புக்கு ஸ்பெக்ட்ரம் மிகவும் முக்கியமானது. ஸ்பெக்ட்ரம் சிறப்பாக கிடைப்பதால், சேவைகளின் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஏலம் முடிந்து, அடுத்த சில நாட்களில், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, அலைக்கற்றைக்கு ஒப்புதல் அளித்தல், ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட அனைத்து அலுவலக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து அக்டோபரில் இந்த சேவைகள் கிடைக்கும்'' என்று தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.


Next Story