காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக முறியடிப்பு!


காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக முறியடிப்பு!
x

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், நேற்று இரவு நடந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) நடந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

ஜம்முவில் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள நவுஷேரா செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில், நேற்றிரவு எல்லையை தாண்டி இங்கு வரவிருந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது என்று தெரிவித்தார்.

இந்த ஊடுருவல் சம்பவம் குறித்த விரிவான தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக, ஆகஸ்ட் 21 அன்று ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா நகரின் சேஹர் மக்ரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்ததாக கூறப்படும் ஒரு பயங்கரவாதியை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story