இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம்: விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்


இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம்: விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்
x

கடந்த மார்ச் மாதம் இந்திய ஏவுகணை ஒன்று தவறுதலாக பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

புதுடெல்லி,

ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஏவுகணை ஒன்று எதிர்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. பின்னர் அந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் "இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று, விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்" என கூறினார்.

இந்த நிலையில், ஏவுகணை பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவை பிறப்பித்து உள்ளது.


Next Story