நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா அறிவிப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு: அவரை போன்றவர்கள் இந்திய அரசியலுக்கு தேவை எனவும் கருத்து


நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா அறிவிப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு: அவரை போன்றவர்கள் இந்திய அரசியலுக்கு தேவை எனவும் கருத்து
x
தினத்தந்தி 19 Jan 2023 7:34 AM GMT (Updated: 19 Jan 2023 7:55 AM GMT)

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரைப் போன்றவர்கள் இந்திய அரசியலில் அதிகம் தேவை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார். இந்த நிலையில், நியூசிலாந்து பிரதமரை பாராட்டியுள்ள காங்கிரஸ் கட்சி அவரைப்போன்றவர்கள்தான் இந்திய அரசியலுக்கு தேவை என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் விஜய் மெர்ச்சன்ட் ஒருமுறை கூறுகையில் தனது துறையில் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும்.. ஏனெனில், அவர் ஏன் இன்னும் போகவில்லை என்றும் மக்கள் கேட்காமல், அவர் ஏன் இப்போதே செல்கிறார் என்ற நிலையிலேயே உங்கள் ஓய்வை அறிவித்து விடுங்கள் எனக்கூறினார். அவரது வார்த்தைகளை பின்பற்றி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரைப் போன்றவர்கள் இந்திய அரசியலில் அதிகம் தேவை" எனப்பதிவிட்டுள்ளார்.


Next Story