கணவன் - குழந்தைகளை விட்டு விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்...!


கணவன் - குழந்தைகளை விட்டு விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்...!
x

சீமா ஹைதர் போல் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்று உள்ளார்.

அல்வார்,

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (வயது 30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (வயது 23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலன் சச்சினுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக சீமாவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சச்சினும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு கடந்த ஜூலை 7-ந்தேதி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

தற்போது சீமா பாகிஸ்தான் திரும்ப விரும்பவில்லை என்றும், இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார். ஆனால் சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அவர் எல்லை தாண்டிய காதலரா அல்லது உளவாளியா என்பதை விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை தேடி பாகிஸ்தான் சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இந்தியப் பெண், தனது பேஸ்புக் காதலரான நஸ்ருல்லாவை சந்திப்பதற்காக பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வாவுக்குச் சென்றுள்ளார்.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி தொழிற்பேட்டையில் பணிபுரியும் பெண் அஞ்சு, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்று உள்ளார்.

பேஸ்புக் மூலம் நஸ்ருல்லாவுடன் அஞ்சுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவரை வெறித்தனமாக காதலித்ததாகவும் அதனால் அவர் தனது இரண்டு குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள கர்புரா கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்தன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தான் அல்வாரில் பிவாடி பகுதியில் வசித்து வருகிறார்

அரவிந்தன் மனைவி அஞ்சு மூன்று நாட்களுக்கு முன்பு லாகூர் சென்று உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் குழந்தைகளுடன் வீடியோ அழைப்பில் பேசியபோது, தனது தோழியை சந்திக்க லாகூர் வந்திருப்பதாக கூறினார்.

அரவிந்தன் 2005 ஆம் ஆண்டு முதல் பிவாடியில் பணிபுரிந்து வருகிறார். மேலும் 2007 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சுவும் பிவாடி தப்புகடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அஞ்சு பாகிஸ்தானுக்கு செல்ல புது சிம் வாங்கியிருந்தார். அதன் நம்பரை கூட கணவனுக்கு கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய விஷயம். இது தொடர்பாக உள்ளூர் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story