இந்தியாவில் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கும் பணி ஜூலை 2023-ல் நிறைவடையும்


இந்தியாவில் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கும் பணி ஜூலை 2023-ல் நிறைவடையும்
x
தினத்தந்தி 9 Aug 2022 5:04 PM GMT (Updated: 9 Aug 2022 5:09 PM GMT)

மெட்ரோ ரெயில் சேவை பணி ஜூன் 2023க்குள் நிறைவடையும் என்று கேஎம்ஆர்சி தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணம் செய்து வருகின்றனர். கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பயணிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கொல்கத்தாவின் ஹூக்ளி ஆறு வழியே இந்த மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது கொல்கத்தாவின் சால்ட் லேக்கை ஹவுராவுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை 16.6 கிலோமீட்டர் நீளமும், ஹூக்ளி ஆற்றின் அடியில் 500 மீட்டர் நீளமும், ஆற்றுப்படுகைக்கு கீழே 33 மீட்டர்களும் இருக்கும்.

தற்போது வேகமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் சேவை பணி அடுத்த ஆண்டு ஜூன் 2023க்குள் நிறைவடையும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (கேஎம்ஆர்சி) தற்போது தெரிவித்துள்ளது. நீருக்கு அடியில் இந்த மெட்ரோ ரயில் தொடங்கப்படும் பட்சத்தில் பயணிகளின் பயண நேரத்தை அது கணிசமாகக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story