இந்தியாவின் உட்கட்டமைப்பு மனிதர் யோகி ஆதித்யநாத்; மத்திய மந்திரி கோயல் புகழாரம்


இந்தியாவின் உட்கட்டமைப்பு மனிதர் யோகி ஆதித்யநாத்; மத்திய மந்திரி கோயல் புகழாரம்
x

இந்தியாவின் உட்கட்டமைப்பு மனிதர் யோகி ஆதித்யநாத் என மத்திய மந்திரி கோயல் புகழாரம் சூட்டியுள்ளார்.வாரணாசி,


உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை மத்திய மந்திரி பியூஷ் கோயல் புகழ்ந்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உத்தர பிரதேசத்தில் செய்து முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கான விகிதத்தினை போன்று நாட்டில் வேறெங்கும் பணிகள் முடிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

வளர்ச்சிக்கான ஓர் அடையாளம் ஆக யோகி ஆதித்யநாத் இன்று பணியாற்றி வருகிறார். உத்தர பிரதேசத்தில், சாலைகள், விரைவு சாலைகள், உலக தரத்திலான தொழில் நுட்ப வசதிகள் கொண்ட சரக்கு ரெயில் போக்குவரத்து வழித்தடம், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை முதன்மையான எடுத்துக்காட்டுகள் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தியதற்காக, அந்த மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே அவருக்கு நன்றி கடன்பட்டு உள்ளது. யோகி ஆதித்யநாத், இந்தியாவின் உட்கட்டமைப்பு மனிதராக இருக்கிறார் என அவருக்கு மத்திய மந்திரி கோயல் புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story