எல்லை பிரச்சினை: இருநாட்டு மந்திரிகள் சந்திப்பில் சீனாவிடம் தனது நிலைப்பாட்டை தெரிவித்த இந்தியா


எல்லை பிரச்சினை: இருநாட்டு மந்திரிகள் சந்திப்பில் சீனாவிடம் தனது நிலைப்பாட்டை தெரிவித்த இந்தியா
x

இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின் போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

கால்வான் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளின் முதல் சந்திப்பின் போது இந்தியா சீனாவுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கிழக்கு லடாக்கில் சீனாவுடனான நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையை சீனாவின் இனை ஜெனரல் லி ஷாங்புவிடம் எழுப்பினார்.

அதே நேரத்தில் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளை சிதைத்துவிட்டதாகவும், இந்தியா-சீனா உறவுகளின் வளர்ச்சி அடிப்படையிலானது என்றும் வலியுறுத்தினார்.

தற்போதைய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிகளின்படி, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்று ராஜ்நாத் சிங், லியிடம் கூறியதாக பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறியது.

லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் இந்திய வீரர்களுடன் மோதலுக்கு வழிவகுத்தன. இதில் மிக மோசமானது கல்வான் பள்ளித்தாக்கில் நடந்தது. கடந்த 2020 ல் இரு நாட்டு ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சீன தரப்பில் 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தாலும், எங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது.

அப்போதிருந்து, லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இந்திய நிலப்பரப்பை சீனா பிரித்து, சாலைகள் மற்றும் விமானத் தளங்களின் அடிப்படையில் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story