வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட  3 பேர் கைது
x

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிக்பள்ளாப்பூர்:கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா சிக்ககாடகோணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடலட்சுமய்யா(வயது 82). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்பள்ளாப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் சென்ற வெங்கடலட்சுமய்யாவை வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்கநகையை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த வெங்கடலட்சுமய்யா அளித்த புகாரின் பேரில் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரு கவுரிபாளையாவை சேர்ந்த இம்ரான் பாஷா(வயது 27), சிக்கந்தர் குரீஷ் (24), மற்றும் சபரீஷ் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.5½ லட்சம் மதிப்பிலான தங்கநகைளை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story