பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள், சிவமொக்கா நகருக்குள் நுழைய தடை
பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள், சிவமொக்கா நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவமொக்கா;
சிவமொக்கா நகரை சேர்ந்தவர்கள் சமந்த் நாயக்(வயது 29), சந்தீப் குமார்(29). ரவுடிகளான இவர்கள் 2 பேர் மீதும் சிவமொக்கா டவுன், வினோபா நகர் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, அச்சுறுத்துவது உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சிவமொக்கா நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 2 பேரையும், சிவமொக்கா நகரில் இருந்து வெளியேற்றி அடுத்த மாதம்(செப்டம்பர்) 25-ந்தேதி வரை நுழைய தடைவிதித்து போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாந்த் உத்தரவிட்டார்.
அதன்பேரில் 2 பேரும், சிவமொக்கா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story