வாக்காளர் பட்டியல் முறைகேடு முதல்-மந்திரிக்கு தெரியாமல் நடந்து இருக்குமா?; காங்கிரஸ் கேள்வி


வாக்காளர் பட்டியல் முறைகேடு முதல்-மந்திரிக்கு தெரியாமல் நடந்து இருக்குமா?; காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

வாக்காளர் பட்டியல் முறைகேடு முதல்-மந்திரிக்கு தெரியாமல் நடந்து இருக்குமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா வழங்கவில்லை

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் சிலுமே நிறுவனத்துடன் பெங்களூரு மாநகராட்சிக்கும் தொடர்பு உள்ளது. அரசு உத்தரவிடாமல் இந்த முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. பெங்களூரு மாநகராட்சி முதல்-மந்திரியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு முதல்-மந்திரிக்கு தெரியாமல் நடைபெற்று இருக்குமா?.

பா.ஜனதாவில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த எந்த ஒரு தலைவரும் பேசவில்லை. தலித் சமூகத்திற்கு உரிய மரியாதையை பா.ஜனதா வழங்கவில்லை. போலீஸ் துறையின் ஊழல் குறித்து பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே கூறியுள்ளார். பணம் பெற்று கொண்டு இஷ்டம் போல் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு தொடர்பு உள்ளதா?. அதனால் தான் அவர் மவுனமாக உள்ளாரா?.

ஆபரேஷன் தாமரை

மராட்டியத்தில் ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ஆட்சி அமைந்தபோது, இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அம்மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ் கர்நாடகத்திற்கு எதிராக கருத்துகளை கூறியுள்ளார். இதை பார்த்து கொண்டு இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள் மவுனமாக உள்ளனர்.

இவ்வாறு காங்கிரஸ் கூறியுள்ளது.


Next Story