பெங்களூருவில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்


பெங்களூருவில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யும்-  வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெங்களூரு புறநகர், துமகூரு, ராமநகர், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், குடகு, கோலார் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடகர்நாடக மற்றும் மலை நாடு மாவட்டங்களிலும் இன்னும் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக குளிரும் அதிகரித்து விட்டது. மழை காரணமாக பெங்களூருவில் மேலும் சில நாட்கள் குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெங்களூரு நகரில் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.



Next Story