ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு; பாதிப்பு ஏதும் இல்லை என தகவல்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
எனினும், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார், எதற்காக நடத்தினார்கள் என்ற முழு விவரம் தெரியவில்லை. குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு கார் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story