ஒடிசாவில் பள்ளி விளையாட்டுப் போட்டியின் போது கழுத்தில் ஈட்டித் துளைத்து மாணவன் காயம்


ஒடிசாவில் பள்ளி விளையாட்டுப் போட்டியின் போது கழுத்தில் ஈட்டித் துளைத்து மாணவன் காயம்
x

ஒடிசாவில் பள்ளி ஆண்டு விளையாட்டுப் போட்டியின் போது கழுத்தில் ஈட்டித் துளைத்ததில் 9-ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தார்.

பலங்கிர்,

ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று அரசுப் பள்ளியின் ஆண்டு விளையாட்டுப் போட்டியின் போது ஈட்டி கழுத்தில் துளைத்ததில் 9-ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தார்.

அகல்பூர் ஆண்கள் பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் பயிற்சி அமர்வின் போது மற்றொரு மாணவர் வீசிய ஈட்டி, மெஹர் என்ற 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் தாக்கியது. வலதுபுறம் குத்திய ஈட்டி இடதுபுறத்தில் வெளியே வந்தது. இதையடுத்து கழுத்தில் ஈட்டியுடன் மாணவன் பலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் ஈட்டியை பாதுகாப்பாக அகற்றினர். மாணவன் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டாலும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ. 30,000 நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறுவனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், அதற்கு தேவையான நிதியை முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கவும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். விபத்தை தொடர்ந்து அங்கு விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டது.


Next Story