ஜே.சி. ரோடு மேம்பால திட்டத்திற்கு ரூ.270 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு ஜே.சி ரோட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.270 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக ஜே.சி.ரோடு உள்ளது. இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த திட்டம் சில உள்விவகாரம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜே.சி.ரோடு பகுதியில் புதிதாக மேம்பாலத்தை அமைக்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள். பாலம் கட்டுவதற்கு ரூ.270 கோடி வரை செலவாகும் என மதிப்பீடப்பட்டு இருக்கிறது. இது கடந்த மதிப்பீட்டை விட ரூ.50 கோடி அதிகமாகும். அந்த சாலையில் மேம்பாலம் வரும் பட்சத்தில் மினர்வா சர்க்கிள், டவுன் ஹால், ஹட்சன் சர்க்கிள் உள்பட 7 முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.