ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு தள்ளிவைப்பு


ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 20 July 2022 12:17 PM GMT (Updated: 20 July 2022 12:18 PM GMT)

ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு ஜூன் 23 முதல் ஜூன் 29 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜூலை 12-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு நாளை முதல் 30-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்விற்கு சுமார் 6.29 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வுவருகிற ஜூலை 25-ந் தேதி தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


Next Story