காஷ்மீர்: எல்லைக் காவல் படையினர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!


காஷ்மீர்: எல்லைக் காவல் படையினர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
x

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் அருகே ஆகஸ்ட் 16 அன்று நடந்த பேருந்து விபத்தில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே ஆகஸ்ட் 16 அன்று நடந்த பேருந்து விபத்தில் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.

பேருந்தில் பயணம் செய்த இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் அமர்நாத் யாத்திரைக்கான பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு சந்தன்வாடியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.

பிரேக் பிடிக்காத காரணத்தால் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 பேர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த இருவர் உட்பட 39 பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரர் நந்தன் சிங் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்து விபத்தில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் தற்போது பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story