கர்நாடகாவில் நடைபெறும் அனைத்து மத்திய, மாநில நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் - அரசு உத்தரவு
கர்நாடகாவில் நடத்தப்படும் அனைத்து மத்திய, மாநில நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக தலைமை செயலாளர் கன்னடா வளர்ச்சி ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவில் மத்திய, மாநில அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும். நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்கள், பேனர்களில் கன்னடா மொழி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இதை நடைமுறைபடுத்த அனைத்து அரசுத்துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story