கார்கில் வெற்றி தினம் ராணுவத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்


கார்கில் வெற்றி தினம் ராணுவத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்
x

கார்கில் வெற்றி தினம் நமது ராணுவத்தின் அசாதாரண வீரம், துணிவு, உறுதியின் அடையாளம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கார்கில் வெற்றி தினம் ராணுவத்தின் அசாதாரண வீரத்தின் அடையாளம். தாயகத்தைக் காக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் என்றும் கடன்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்.

லடாக்கின் கார்கிலில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி வெற்றி பெற்றது. இந்த நாள், கார்கில் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'கார்கில் வெற்றி தினம் நமது ராணுவத்தின் அசாதாரண வீரம், துணிவு, உறுதியின் அடையாளம். தாய்நாட்டை காக்க தங்கள் உயிரைக் கொடுத்த தீரமிக்க வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் என்றும் கடன்பட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.


Next Story