கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

கர்நாடகத்தில் இதுவரை இறப்பு மிக குறைவாக இருந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று 29 ஆயிரத்து 425 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூரு நகரில் 1,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.24 ஆக உள்ளது. 1,290 பேர் குணம் அடைந்தனர். 11 ஆயிரத்து 898 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை இறப்பு மிக குறைவாக இருந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com