கர்நாடக ராணுவ வீரர் மாரடைப்பால் சாவு; உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை
மேற்கு வங்கத்தில் பணியின்போது கர்நாடக ராணுவ வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் குந்தகோல் பகுதியில் உள்ள ரோட்டிகவாடா கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரையா ஹிரேமட் (வயது 49). ராணுவ வீரர். கடந்த 28 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
தற்போது மேற்கு வங்க மாநிலம் குஜ்பிகாரில் கங்காதரையா ஹிரேமட் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்த ராணுவ வீரர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான ரோட்டிகவாடா கிராமத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் சொந்த ஊருக்கு வந்தவுடன் ராணுவ மரியாதையுடன் அடக்கம் ெசய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை தாலுகா அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story