கர்நாடகா: கோழிப்பண்ணையில் போலி உரம் தயாரித்து விற்பனை - ஆயிரக்கணக்கான மூட்டைகள் பறிமுதல்...!


x

மைசூரில் கோழிப்பண்ணையில் போலி உரம் தயாரித்து பல்வேறு உர கம்பெனி பைகளில் நிரப்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டகள்ளி கிராம அருகில் இருக்கும் ஒம்பாளே கவுட என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் விளைச்சலுக்கு பயன்படுத்தும் உர போலவே போலியான உரம் தயாரித்து, அசல் ரசாயன உர பைகளில் நிரப்பி அந்த கம்பெனி பேரிலேயே விற்பனை அனுப்பி உள்ளனர்.

விவசாயிகள் இது கம்பெனி உரம் தான் என்று வாங்கிக் கொண்டு பயன்படுத்தும் பொழுது இது உண்மையான கம்பெனியை சேர்ந்த உரம் அல்ல போலியான உரம் என்று தெரிந்தது. இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட விவசாயத்துறைக்கும், மைசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கோழிப்பண்ணையில் சோதனை நடத்தினர். அப்போது ஆயிரக்கணக்கான பல்வேறு உர கம்பெனிகளை சேர்ந்த பைகளில் போலி உரங்களை நிரப்பி அடுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து இந்த உரங்ளை பறிமுதல் செய்த போலீசார், கோழி பண்ணைக்கு சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story