கர்நாடக மந்திரி மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரம் துறை மந்திரி மாரடைப்பால் மரணமடைந்தார்.
கர்நாடக மந்திரி மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சி சம்பவம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் மாநில வனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ் கடாய் (வயது 61). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், உமேஷ் கடாய்க்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் உள்ள கழிவறையில் உமேஷ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். உமேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மந்திரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி, மந்திரிகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com