கர்நாடக போலீஸ் அதிகாரிகள் 7 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து


கர்நாடக போலீஸ் அதிகாரிகள் 7 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து
x

கர்நாடக போலீஸ் அதிகாரிகள் 7 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது.

பெங்களூரு: கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கே.ஏ.எஸ். (கர்நாடக ஆட்சி பணி) மூலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக சச்சின் கோர்படே, அமதி விக்ரம், சஜீத், ராம்லட்சுமண அரசித்தி, பாபாசாப் நெமகவுட், கோபால் பாகோட், நந்தகன்வி ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்த 7 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைத்துள்ளது.


Next Story