கர்நாடகத்தில் உத்தரபிரதேச மாடலை பின்பற்ற வேண்டும்-ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பேட்டி


கர்நாடகத்தில் உத்தரபிரதேச மாடலை பின்பற்ற வேண்டும்-ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பேட்டி
x

கர்நாடகத்தில் உத்தர பிரதேச மாடலை பின்பற்ற வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரேணுகாச்சார்யா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ., கர்நாடகத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக சொல்கிறார். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். இந்துக்கள் தான் முதல்-மந்திரி ஆக வேண்டும். முஸ்லிம்கள் முதல்-மந்திரி ஆக முடியாது. கர்நாடகத்தில் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 15 பேர் இந்துக்கள் கொல்லப்பட்டனர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகும் இத்தகைய கொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மாதிரியை கர்நாடகத்தில் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.


Next Story