4 காதலர்களை வைத்து கணவனுக்கு மது விருந்து கொடுத்து கொலை செய்த மனைவி

தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி மாதூரி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
4 காதலர்களை வைத்து கணவனுக்கு மது விருந்து கொடுத்து கொலை செய்த மனைவி
Published on

ஜான்சி

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ரக்சியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவா (28). சிவாவுக்கு மாதுரி அகிர்வார் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து உள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் ஆகிய நான்கு நபர்களுடன் மனைவி மாதுரிக்கு காதல் இருந்துள்ளது.

இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி மாதூரி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதன்படி, சதித்திட்டம் தீட்டி கணவர் சிவாவை அழைத்து சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் சிவாவின் சகோதரர் வினோத்திற்கு தெரியவந்துள்ளது.

அவர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மனைவி மாதுரி மற்றும் அவரது காதலர்கள் 4 பேரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com