கேரளா: ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது தங்க அங்கி ஊர்வலம்..!


கேரளா: ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது தங்க அங்கி ஊர்வலம்..!
x

கேரளா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

திருவனந்தபுரம்,

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பனுக்கு அணுவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று புறப்பட்டது. பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து 26-ந்தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வரும் அந்த அங்கி, மாலை சந்நிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அய்யப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது.

பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story