கேரளாவை உலுக்கிய நரபலி வழக்கு; 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - அரசு தரப்பு கோர்ட்டில் விளக்கம்


கேரளாவை உலுக்கிய நரபலி வழக்கு; 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - அரசு தரப்பு கோர்ட்டில் விளக்கம்
x

நரபலி வழக்கில் இன்னும் 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் 2 பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த விவகாரத்தில் போலி மந்திரவாதி முகம்மது ஷபி, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சிறையில் உள்ள பகவல் சிங்கின் மனைவி லைலா, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, லைலாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் இரட்டை நரபலி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.



Next Story