துரோகம் செய்ததாக சந்தேகம்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், மனைவியை அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், மனைவி துரோகம் செய்ததாக சந்தேகித்து அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர்,
வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகித்து அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே விய்யூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது 56) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந்தேதி வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த உன்னிகிருஷ்ணனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன், 46 வயதான தனது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு இன்று அதிகாலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விய்யூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Related Tags :
Next Story