கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை
x

கோப்புப்படம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் ரூ.90 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகி இருந்தது.


Next Story