கேசம்பள்ளி கூட்டுறவு வங்கி மேலாளர், ஊழியர் கைது


கேசம்பள்ளி கூட்டுறவு வங்கி மேலாளர், ஊழியர் கைது
x

கேசம்பள்ளி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.54 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானது தொடர்பாக வங்கி மேலாளர் மற்று ஊழியர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:-

நகைகள் மாயம்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கேசம்பள்ளியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கேசம்பள்ளி வருவாய் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நகை அடகுக்கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில் 3 மதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாரிகள் வங்கியில் கணக்குகளை தணிக்கை செய்தனர்.

அப்போது 20 விவசாகயிகள் வங்கியில் அடகு வைத்திருந்த 1,436.5 கிராம் தங்கம் காணாமல் போயிருந்தது. மேற்கண்ட தங்கநகைகள் ரூ.34.90 லட்சத்திற்கு அடகு வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 லட்சத்து 6 ஆயிரத்து 898 என்று மதிப்பிடப்பட்டது.

போலீசில் புகார்

இதுகுறித்து தணிக்கை அதிகாரிகள் வங்கியின் மேலாளர் நாயக்கிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து தணிக்கை குழு அதிகாரிகள் வங்கியின் இயக்குனர் தேவதாசுக்கு தகவல் கொடுத்தனர்.

வங்கிக்கு வந்த இயக்குனர் தேவதாஸ் வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினார். அவர் உரிய பதில் அளிக்காததால், இதுகுறித்து கேசம்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கைது

அதன்பேரில் கேசம்பள்ளி போலீசார் சியாமளா வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் நாயக், ஊழியர்களான மஞ்சுநாத், பாலுமகேந்திரா

ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர்,

வங்கி இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் நாயக், பாலுமகேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள மஞ்சுநாத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அச்சம் கொள்ள தேவையில்லை

வங்கியில் அடகு வைத்த தங்க நகைகள் குறித்து வங்கியின் இயக்குனர் தேவதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வங்கியில் அடகு வைத்த தங்கநகைள் காணாமல் போனது குறித்து விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ளவேவையில்லை. அவரவர்களின் உடமைகள் அவரவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அத்துடன், தலைமறைவாக உள்ள மஞ்சுநாத் கிடைத்ததும் வங்கியில் காணாமல் போன தங்கநகைகள் குறித்த விவரங்கள்

தெரியவரும். அதன்பின்னர், பிரச்சினைக்கு முடிவு

தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story