ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் இடித்து தள்ளுங்கள் - மம்தா பானர்ஜி உத்தரவு


ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால்  இடித்து தள்ளுங்கள் -  மம்தா பானர்ஜி உத்தரவு
x

தாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடித்து தள்ளுமாறு அதிகாரிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரியாக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

அதேபோல் மேற்கு வங்க மாநில மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் நிர்வாகிகள் மீது பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மொண்டலுக்கு 2020-ல் கால்நடை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அதேபோல் மந்திரியாக இருந்த பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது மம்தா பானர்ஜியின் உறவினர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்திருப்பதாக கூறி இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டில் தொடர்ந்து இருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்-மந்திரியான பிறகு அவரது உறவினர்கள், சகோதர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மம்தாவின் சகோதர் சமிர் பானர்ஜியின் மனைவி கஜாரி பானர்ஜி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் பொதுப்பணியாளர் என்பதால் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த மம்தா பானர்ஜி,

சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட நிலத்தை நான் வைத்துள்ளதாக ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எனக்கு அதுபற்றி தெரியாது. நாங்கள் ராணி ராஷ்மோனி பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குத்தகைக்கு எடுத்து வீட்டில் வசித்து வருகிறோம். இன்றைய கூட்டத்தில் தலைமை செயலாளரிடம் அந்த இடம் குறித்து விசாரிக்கவும், புல்டோசரை கொண்டு சென்று வீட்டை இடிக்கவும் உத்தரவிட்டு உள்ளேன் என்றார்.


Next Story