கேரளா: லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளி சட்டசபை ஒத்திவைப்பு


கேரளா: லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளி சட்டசபை ஒத்திவைப்பு
x

கேரளா சட்டசபையில் லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் தொடரபாக இன்று கேரளா சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியி ஈடுபட்டன

இது குறித்து நோட்டீஸ் கொடுத்த எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன், கிளிப் ஹவுஸில் பினராயி, கன்சல் ஜெனரல் சிவசங்கர், ஸ்வப்னா ஆகியோர் கலந்து கொண்டு கூட்டம் நடத்தியதாக ஸ்வப்னா கூறியதாக சபையில் குற்றம்சாட்டினார்.

அதையடுத்து, கோபத்தில் எழுந்த முதல்வர், குழல்நாடனின் குற்றச்சாட்டு பொய் என்றும், தான் யாரையும் சந்திக்கவில்லை என்றும் பதிலடி கொடுத்தார். இதனால், சபையில் எதிர்க்கட்சியினருக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே கடும் அமளியும், வாக்குவாதமும் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

1 More update

Next Story