காதல் மனைவி கோடரியால் வெட்டி கொலை: தொழிலாளி கைது


காதல் மனைவி கோடரியால் வெட்டி கொலை:  தொழிலாளி கைது
x

காதல் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெட்டப்பா (வயது 36). இவரது மனைவி ரேணுகா (30). இந்த தம்பதி காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ரேணுகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜெட்டப்பா கடந்த சில தினங்களாக ரேணுகாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்று காலை நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ரேணுகாவிடம் தகராறு செய்த ஜெட்டப்பா திடீரென வீட்டில் இருந்த கோடரியை எடுத்து ரேணுகாவின் தலையில் வெட்டினார்.

இதில் ரத்தவெள்ளத்தில் ரேணுகா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து லிங்கசுகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ஜெட்டப்பா, ரேணுகாவை கொலை செய்து விட்டதாக கூறி போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேணுகாவின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை சம்பவம் குறித்து லிங்கசுகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story