மத்திய பிரதேசம்; குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி


மத்திய பிரதேசம்; குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
x

image courtesy; ANI

குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் உள்ள நைக்வா கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். இந்நிலையில் குளத்தின் ஆழம் தெரியாமல் குளித்ததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்லீமனாபாத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணை மாஜிஸ்திரேட் மற்றும் பிற அதிகாரிகள் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இறுதி சடங்கிற்கு நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் கொடுத்தனர். மேலும் இன்று மாலை உதவித்தொகையாக ரூ .4 லட்சம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

1 More update

Next Story