கருணை காட்டுங்கள் என மாஃபியாக்கள் கெஞ்சும் நிலை வந்துள்ளது: யோகி ஆதித்யநாத்


கருணை காட்டுங்கள் என மாஃபியாக்கள் கெஞ்சும் நிலை வந்துள்ளது: யோகி ஆதித்யநாத்
x

உத்தர பிரதேசத்தில் மாஃபியாக்கள் கெஞ்சும் நிலை வந்து உள்ளதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் மாஃபியாக்கள் , தங்கள் மீது கருணை காட்டுமாறு கெஞ்சும் நிலை வந்து இருப்பதாக உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பிரக்யராஜ்ஜில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- குற்ற செயல்களுக்கு எதிராக சகிப்புத்தன்மை இன்றி நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாஃபியாக்களை அலற வைத்து விட்டது.

தற்போது வளர்ச்சிக்கு யாரும் தடை விதிக்க முடியாத நிலயும் ஏழைகளின் நிலத்தை அபகரிக்க முடியாத நிலையும் உள்ளது. மாஃபியாக்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்டு ஏழை மக்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது" என்றார்.


Next Story