பார்ட்டியின் போது மதுபோதையில் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி...!

19 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார்.
பார்ட்டியின் போது மதுபோதையில் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி...!
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிலபூர் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

அங்கு அனைவரும் மதுபானம் குடிக்கும் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான பார்ட்டியில் ஈடுபடும் குழுவில் அந்த இளம்பெண்ணும் இருந்துள்ளார். அவரும் மதுபானம் குடித்துள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியில் நண்பர்கள் அனைவரும் மதுகுடித்துள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த அந்த இளம்பெண் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளம்பெண்ணுடன் மதுபான பார்ட்டியில் ஈடுபட்ட 2 ஆண் நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com